முகப்பு
தற்போதைய செய்திகள்

லாரி மோதி இளைஞர் சாவு

தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இமானுவேல் மகன் பாண்டி (28). இவர், எட்டையபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே  மோட்டார் சைக்கிளில் சென்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:18 AM
பகிர்:

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இமானுவேல் மகன் பாண்டி (28). இவர், எட்டையபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே தவறி விழுந்த பாண்டி லாரியில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடைபெற்றபோது மழை பெய்து கொண்டிருந்ததால் பாண்டியின் சடலத்தை அரை மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் அகற்றவில்லை.

இதையெடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற தூத்துக்குடி வடபாகம் போலீஸார் பாண்டியின் சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.