முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட அளவில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை சமூகத் தணிக்கை செய்ய மெட்டுக்குண்டு ஊராட்சி தேர்வு

விருதுநகர் மாவட்ட அளவில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை சமூக தணிக்கை செய்வதற்கு, மெட்டுக்குண்டு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, வருகிற 20ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

Updated On : 18 ஏப்ரல், 2013 at 6:42 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:51 PM

விருதுநகர் மாவட்ட அளவில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை சமூக தணிக்கை செய்வதற்கு, மெட்டுக்குண்டு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, வருகிற 20ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மெட்டுக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2-ம் அரையாண்டில் அக்.முதல், மார்ச்  வரையில் நடந்த முடிந்த வேலைகளை தணிக்கை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த சமூக தணிக்கைக்கு விருதுநகர் மாவட்ட அளவில் மெட்டுக்குண்டு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம ஊராட்சி சமூக தணிக்கை வல்லுநர்கள் திட்டப் பயணாளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நிலை கண்காணிப்பாளர், வட்டார வல்லுநர்கள் ஆகியோர் 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன், அடிப்படையில் கடந்த 15 ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 19 ம் தேதி வரையில் கடந்த 6 மாதங்களில் நடந்த வேலைகளை நேரடி கள மதிப்பீடு செய்து,  பயனாளிகளிடம் வேலை அடையாள அட்டைகளை பெற்று ஊதிய விவரங்கள் குறித்து வீடு, வீடாக சென்று, பெற்ற தினக்கூலி வருகை பதிவேடுகளில் ஒப்பிட்டு பார்க்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே இது குறித்த பணிகளை மேற்கொள்வது குறித்து  தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க இயக்குநரால் சமூக தணிக்கையாளர்களுக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மெட்டுக்குண்டு ஊராட்சியில் வரும் 20-ம் தேதி சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில், திட்டத்தின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். 

இதன் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயன்கள் சரியான நேரத்தில், முறையாக பயனாளிகளுக்கு சென்றுள்ளதா என்பது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், திட்ட செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையாகவும், நேர்மையாகவும் நடைபெறுகிறதா என்பதற்கு முன் உதாரணமாக அமையும். இந்த நிலையில் குறிப்பிட்ட நாளில் மெட்டுக்குண்டு ஊராட்சியில் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ம.கதிரேசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.