மரம் வெட்டும் தொழிலாளி சித்ரவதை- முதலாளி மீது வழக்கு பதிவு
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஈச்சங்காடுமேடு பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் முனுசாமி. இருளர் இனத்தை சேர்ந்தவரான இவர் நத்தம் ஊராட்சியை சேர்ந்த காராமணிமேடு
தற்போதைய செய்திகள்மரம் வெட்டும் தொழிலாளி சித்ரவதை- முதலாளி மீது வழக்கு பதிவு
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஈச்சங்காடுமேடு பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் முனுசாமி. இருளர் இனத்தை சேர்ந்தவரான இவர் நத்தம் ஊராட்சியை சேர்ந்த காராமணிமேடு
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈச்சங்காடுமேடு பகுதியை சேர்ந்த முனுசாமி(30) என்பவரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அளித்த புகாரின் பேரில் காராமணிமேடு பகுதியை சேர்ந்த நில உரிமையாளர் சபாபதியை ஆரம்பாக்கம் போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஈச்சங்காடுமேடு பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் முனுசாமி. இருளர் இனத்தை சேர்ந்தவரான இவர் நத்தம் ஊராட்சியை சேர்ந்த காராமணிமேடு கிராமத்தில் உள்ள சபாபதி என்பவரது 8 ஏக்கர் பரப்பிலான தைல மர தோப்பில் மரங்களை வெட்டும் வேலையை கடந்த 1 மாதமாக செய்து வருகிறார்.இந்நிலையில் முனுசாமி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவரது வீட்டிற்கு சென்று மறுநாள் வேலைக்கு வராத சூழலில் இரண்டு நாட்கள் கழித்து அவரது வீட்டிற்கு சென்ற சபாபதி முனுசாமியை திட்டி வலுக்கட்டாயமாக அவரை தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளார்.அத்தோடு அங்கிருந்த தனி அறையில் முனுசாமியை அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்து மரம் வெட்டும் வேலையை தொடர்ந்து செய்துள்ளார். தினமும் சபாபதியின் கடுமையான வேலை வாங்கும் தன்மையை கண்டு பயந்து போன முனுசாமி, தப்பிக்க தருணம் பார்த்து சபாபதி ஏமாந்த சமயம் பார்த்து அங்கிருந்து தப்பியோடி தான் கொத்தடிமை போல சித்திரவதையுடன் வேலை பார்த்ததாக கூறி சர்ப்பம் இருளர் சங்கத்தினரிடம் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து சங்கத்தினரின் துணையுடன் முனுசாமி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சபாபதி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஆரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி உள்ள சபாபதியை தேடி வருகின்றனர்.