மனநிலை சரியில்லாதவர் தீக்குளித்து சாவு
விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் நாகூர் மீரன்(43). இவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருந்து வந்துள்ளார். அதோடு, இவருக்கு நரம்பு தளர்ச்சி, வயிற்று வலியாலும் அடிக்கடி அவதிப்பட்டு வந்துள்ளார்.
விருதுநகரில் மனநிலை சரியில்லாதவர் மண்ணெண்ணை ஊற்றி தனக்கு தானே தீக்குளித்து உயிரிழந்தார்.
விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் நாகூர் மீரன்(43). இவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருந்து வந்துள்ளார். அதோடு, இவருக்கு நரம்பு தளர்ச்சி, வயிற்று வலியாலும் அடிக்கடி அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில், படுகாயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது உறவினர் அப்துல்காதர் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Advertisement