கார், லாரி மோதிய விபத்தில் ஒருவர் சாவு: 3 பேர் காயம்
சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (47). இவர் தனது மனைவி ரீட்டா (37), ஆயிபுரத்தைச் சேர்ந்த கலையரசி (35) உள்ளிட்ட மூவரும் திங்கள்கிழமை இரவு வாடகை காரில் நாகை
சிதம்பரம் அருகே சி.முட்லூர் வெள்ளாற்று பாலம் அருகே டிப்பர் லாரி கார் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (47). இவர் தனது மனைவி ரீட்டா (37), ஆயிபுரத்தைச் சேர்ந்த கலையரசி (35) உள்ளிட்ட மூவரும் திங்கள்கிழமை இரவு வாடகை காரில் நாகை மாவட்டம் சீர்காழிக்கு புறப்பட்டனர். கார் சி.முட்லூர் வெள்ளாற்று பாலம் அருகே வந்த போது டிப்பர் லாரி ஒன்று கார் மீது மோதியது. இவ்விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஜெயச்சந்திரன் (47) இறந்தார். மனைவி ரீட்டா (37), கலையரசி (35), டிரைவர் ஆகிய மூவரும் மேல் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.