தூத்துக்குடி சிவன்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிவன் கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரர் பாகம்பிரியாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் தீபாராதனை,
தற்போதைய செய்திகள்தூத்துக்குடி சிவன்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிவன் கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரர் பாகம்பிரியாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் தீபாராதனை,
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அரகர மகாதேவா என்ற முழக்கங்களை எழுப்பியபடி திரளான பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிவன் கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரர் பாகம்பிரியாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் தீபாராதனை, வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளஅ நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, இன்று காலை சுவாமி மற்றும் அம்பாள் பரிவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் திருத்தேர் பவனி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.சிறிய தேரில் விநாயகரும், முருகப் பெருமாளும் எழுந்தருளினர். பெரிய தேரில் அருள்மிகு சங்கரராமேஸ்வரர் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் ஆகியோர் வீற்றிருந்தனர். சின்னதேர் காலை 10.15 மணிக்கும் பெரியதேர் காலை 10.22 மணிக்கும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். கீழரதவீதியிலிருந்து தொடங்கி தெற்கு ரதவீதி, மேற்குரதவீதி, வடக்குரதவீதி வழியாக சென்ற தேர் பகல் ஒரு மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி, தேருக்கு முன்னால் யானைகள், ஒட்டகங்கள், நாட்டியக் குதிரைகளின் அணிவகுப்பு, கிளாரினெட், நையாண்டி மேளம், களியல் ஆட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், சென்டை மேள கலைஞர்களின் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெற்றன. இதில், பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ, அரகர மகாதேவா என்ற மந்திரங்களை எழுப்பினர்.
தேரோட்ட நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அலுவலர் வே.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என். சின்னத்துரை, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் க. விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் அன்னதானம், நீர் மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
தேரோட்டத்தையொட்டி, சிவன்கோயிலைச் சுற்றி பகல் 2 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.