முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் 16 வீடுகள் தீயில் நாசம்: மூதாட்டி சாவு

விருதுநகரில் அடுத்தடுத்து 16 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. மூதாட்டி உயிரிழந்தார்.

Updated On : 24 ஏப்ரல், 2013 at 9:46 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:56 PM

விருதுநகரில் அடுத்தடுத்து 16 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. மூதாட்டி உயிரிழந்தார்.

விருதுநகர் தந்திமரத்தெரு பகுதியில் உள்ள சாமியார் கிணற்றுத்தெருவில் வசித்தவர் பட்டம்மாள் (60). செவ்வாய்க்கிழமை இரவு சமையல் செய்த போது  அவரது சேலையி்ல் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதில் அவர் கருகி உயிரிழந்தார். பட்டம்மாள் உடலில் பற்றிய தீ கூரையில் பற்றி அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. அவற்றில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தப்பினர். காற்றின் வேகத்தால் 16 வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.