தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் குடிநீர் திட்ட தளவாடப் பொருள் திருட்டு: 2 பேர் கைது

மொரப்பூர் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரும்பு தளவாடப் பொருள்களை திருடியதாக 2 பேரை போலீஸôர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

சோம வள்ளியப்பன்

மொரப்பூர் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரும்பு தளவாடப் பொருள்களை திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 அரூர் வட்டம், தாசரஹள்ளி-தொங்கனூர் சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுகிறது. இவ்வூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

 தொட்டிகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு தளவாடப் பொருள்கள், இரும்பு சல்லடைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து தனியார் நிறுவன மேற்பார்வையாளர் ஆர்.ராஜாராம் (38) அளித்த புகாரின் பேரில், அரூர் வட்டம், பத்தலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் தம்பிதுரை (24), அமராவதி மகன் மாதேஷ் (25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

 இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இரும்பு தளவாடப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT