தருமபுரி அருகே காஸ் லாரி கவிழ்ந்து விபத்து: அச்சத்தில் பொதுமக்கள்
சென்னை மணலியில் இருந்து கோவைக்கு கேஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி, தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதி ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்தபோது,
சென்னை மணலியில் இருந்து கோவைக்கு கேஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி, தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதி ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்தபோது, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அப்போது, டேங்கரில் இருந்து கேஸ் கசியத் தொடங்கியது. இது வெடித்தால் பெரும் விபரீதம் ஆகிவிடும் என்று உணர்ந்த லாரி ஓட்டுநர் அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டாராம். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் டேங்கர் கேஸ் கசிவைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.