முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

சிதம்பரம் நகரில் கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இந்நிலையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்ற போது வடக்குமெயின் ரோடு தில்லைக்காளியம்மன் கோயில் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த தில்லைக்காளியம்மன் கோயில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:29 AM
பகிர்:

சிதம்பரத்தில் ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் நகரில் கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இந்நிலையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்ற போது வடக்குமெயின் ரோடு தில்லைக்காளியம்மன் கோயில் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த தில்லைக்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (38) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் போலீஸார் மாரியப்பனிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →