தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக விவசாயி கைது

எளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவர் தனக்கு சொந்தமான 2.52 சென்ட் நிலத்தை தனது மகன்கள் வீராசாமி, அம்மாசி ஆகியோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். பின்னர் வீராசாமியின் நிலத்தையும் அம்மாசியே வாங்கிக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் வீராசாமியின் மகன்கள் சுப்பிரமணி(75),

க. தங்கராஜா

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

எளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவர் தனக்கு சொந்தமான 2.52 சென்ட் நிலத்தை தனது மகன்கள் வீராசாமி, அம்மாசி ஆகியோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். பின்னர் வீராசாமியின் நிலத்தையும் அம்மாசியே வாங்கிக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் வீராசாமியின் மகன்கள் சுப்பிரமணி(75), அர்த்தனாரி, வெங்கடேசன், மகள்கள் லட்சுமி, பெருமாயி ஆகியோர், சம்பந்தப்பட்ட 1.26 சென்ட் நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து சுப்பிரமணியின் பெயருக்கு கடந்த 22.1.2013 அன்று பத்திரப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து அறிந்த அம்மாசியின் மகன் ரங்கநாதன்(62), தங்களுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுக் கொடுக்கும்படி சேலம் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஷிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்த டி.எஸ்.பி. முனியப்பன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார், இந்த நில மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரங்கநாதனின் நிலத்தை அபகரித்ததாக சுப்பிரமணியை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக சுப்பிரமணியின் சகோதரர், சகோதரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT