முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஹோட்டல்கள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் உணவு கிடைக்காமல் அவதி

இதனையடுத்து சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகரில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட குளு, குளு வசதியுடான ஹோட்டல்கள் மற்றும் சாதாரண ஹோட்டல்கள் அனைத்தும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:31 AM
பகிர்:

ஹோட்டல்களுக்கு மத்தியஅரசு சேவை வரி விதித்துள்ளதை கண்டித்தும், சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று ஒருநாள் ஹோட்டல்களை மூடிவது என தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகரில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட குளு, குளு வசதியுடான ஹோட்டல்கள் மற்றும் சாதாரண ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக சிதம்பரத்தில் பஸ்நிலையம், நடராஜர் கோயில் அருகாமையில் உள்ள கீழரதவீதியில் ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் இன்று சிதம்பரம் நகருக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் உணவு கிடைக்காமல் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனால் சிதம்பரம் கீழரதவீதியில்  சாலையோரம் உள்ள தள்ளுவண்டி உணவகங்களில் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை உள்ள சுற்றுலாப் பயணிகள் போட்டி, போட்டுக் கொண்டு உணவினை வாங்கி சாப்பிட்டனர். ஒரு சிலர் உணவிற்கு பதிலாக பழங்கள், பிஸ்கட், பிரட், ஜாம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →