மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் மரணம்
சிதம்பரம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பலியானார்.
சிதம்பரம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பலியானார்.
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவர் பால்ராஜ் (16). விருதாச்சலம் அடுத்த புதுக்கூரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் தன்னுடன் படிக்கும் கார்த்திக் என்ற மாணவருடன், பள்ளிக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். பிரேத பரிசோதனைக்காக பால்ராஜின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Advertisement