முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய கடற்படையினர் தாக்கியதால் காரைக்கால் மீனவர்கள் கரை திரும்பினர்

காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகும், இந்த படகைத் தொடர்ந்து 10 பைபர் படகுகளும், அதில் 45 பேர் கடலுக்கு இன்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:04 PM
பகிர்:

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்ததாக, கரை திரும்பிய மீனவர்கள் 45 மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகும், இந்த படகைத் தொடர்ந்து 10 பைபர் படகுகளும், அதில் 45 பேர் கடலுக்கு இன்று காலை மீன்பிடிக்க சென்றனர். காரைக்காலில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இந்திய கடலோரக் காவல் படையினரின் ரோந்துப் படகில் வந்து தாக்கியதாகவும், வலைகள் அறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகவும், செல் பேசி மூலம் காரைக்கால் மீனவர்களுக்கு இன்று பிற்பகல் தகவல் தெரிவித்தனர்.

இதனால் பதற்றத்துடன் அந்த படகில் சென்ற 45 மீனவர் குடும்பத்தினரும் காரைக்கால் துறைமுகத்தில் திரும்பி வரும் படகுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர். பிற்பகல் 3.30 மணியளவில் படகுகள் துறைமுகத்தை வந்தடைந்தது.

இதிலிருந்து இறங்கிய மீனவர்கள் சரமாரியாக இந்திய கடலோரக் காவல்படையினர் மீது புகார் கூறினர். கடலில் விசைப்படகு ஒன்றை சுற்றி 10 பைபர் படகுகள் மீன்பிடிப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தோம்.  இந்திய கடலோரக் காவல்படையினர் நெருங்கிவந்து, மீனவர்களிடம் உரிமங்கள் இருக்கிறதா என கேட்டனர். அதை காட்டிய பிறகு, வலையை சோதித்தனர். தொடர்ந்து கடலில் விரித்திருந்த  வலையை கத்தியால் அறுத்து சேதப்படுத்தினர்.

அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த 10 மீனவர்களை தாக்கினர். இதில் காளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவருக்கு விழுந்த அடியில் காது கேட்காமல் போய்விட்டது. மீனவர்கள் தாக்க்குதலுக்குள்ளானதில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் 10 பேருக்கு அடி விழுந்தது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள வலை சேதத்துக்குள்ளாயின. எல்லைப் பகுதியில் மீன் பிடித்தால் இலங்கை கடற்படையினர் தாக்கியும், கைதும் செய்கின்றனர். இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்தால் தற்போது இந்திய கடலோரக் காவல்படையினரும் தாக்கத் தொடங்கிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு உள்நோக்கம் என்ன என்பது புரியவில்லை என்றனர்.

கடலில் எல்லைப் பகுதியை தாண்ட முற்பட்டாலும், தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தினாலும் இந்திய கடலோரக் காவல்படையினர் தடுத்து திருப்பி அனுப்பவர். மேலும் எந்த படகு என்ற விவரங்களை சேகரித்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்ற அறிவிப்பை இந்திய கடலோரக் காவல்படை தரப்பு அண்மையில் அறிவி்பபு செய்திருந்து. எல்லையை கடக்கும் படகினருக்கு முதல் முறையாக இருந்தால் ரூ.5 ஆயிரம், 2-வது முறையாக இருந்தால் ரூ.10 ஆயிரம், 3-வது முறையாக இருந்தால் மீன்பிடி உரிமம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படுமென புதுச்சேரி அரசும் அறிவித்திருந்த நிலையில், இச்சம்பவம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →