தற்போதைய செய்திகள்

வாகன விபத்தில் பெண்மான் சாவு

விருதுநகர் அருகே பட்டம்புதூர், மருளூத்து, வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் நடமாட்டம் உள்ளது. இப்பகுதி மருளூத்து கண்மாயில் மரங்கள் அடர்த்தியாக

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் 4 வழிச்சாலையை கடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண்மான் இன்று உயிரிழந்தது.

விருதுநகர் அருகே பட்டம்புதூர், மருளூத்து, வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் நடமாட்டம் உள்ளது. இப்பகுதி மருளூத்து கண்மாயில் மரங்கள் அடர்த்தியாக காணப்படுவதால், போதி இரை மற்றும் தண்ணீர் ஆகியவை இருப்பதால் மான்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த மான்கள் அவ்வப்போது அதிகாலை நேரங்களில் இரை, தண்ணீர் தேடி பசுமையான தோட்டப்பகுதிகளுக்கு நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலையிருக்கிறது. அப்போது, எதிர்பாரத விதமாக அடையாளம் தெரியாத வாகன விபத்துக்களில் மோதி உயிரிழந்து வருகிறது.

அதேபோல், பட்டம்புதூர் அருகே 4 வழிச்சாலையை கடந்து செல்லும் போது எதிரே வந்த வாகனம் மோதிய விபத்தில் தலைப்பகுதியில் காயம் அடைந்த நிலையில் பெண்மான் உயிரிழந்து கிடந்தது. இதை, காலை நேரத்தில் தோட்டத்திற்கு சென்ற கிராம மக்கள் பார்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, விரைந்து வந்த வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மானை எடுத்துச் சென்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT