முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் வெள்ளத்தில் 4 பேர் சிக்கி தவிப்பு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த ஒருவர் அடித்து செல்லப்பட்டு,மரத்தின் கிளையை

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:06 PM
பகிர்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளத்தில் நான்கு பேர் சிக்கிக்‌கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த பண்டஹள்ளியைச் சேர்ந்த  மாதப்பன் அடித்து செல்லப்பட்டு,மரத்தின் கிளையை பிடித்து கொண்டார் .அவரை காப்பாற்ற சென்ற 3 பேர் கொண்ட பரிசல் வெள்ளத்தில் கவிழ்ந்ததால் நான்கு பேரும் மரத்தின் கிளையில் தொங்கி ‌கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை,மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன்,காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்பு துறை கோட்ட ஆய்வாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரவு நேரமாதலால் மீட்பு பணிக்காக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள. ஹெலிகாப்டர் மூலம் மீட்க முயற்சி நடக்கிறது.இதற்கிடையே இவர்களை மீட்க அரக்கோணத்திலிருந்து தேசிய இடர்பாடுகள் மீட்பு குழுவினர் விரைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.