தற்போதைய செய்திகள்

மாஜிஸ்திரேட் உத்தரவு மீறல்: எஸ்பி ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

எனது கணவர் லட்சுமணனை சொத்துக்காக உறவினர்கள் கொலை செய்து புதைத்து விட்டனர். அவரது சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து இறப்புக்கான காரணத்தை கண்டறியுமாறு

ஜெயப்பாண்டி

மதுரை மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜகாகி விளக்க அளிக்க எஸ்பி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் லட்சுமணனை சொத்துக்காக உறவினர்கள் கொலை செய்து புதைத்து விட்டனர். அவரது சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து இறப்புக்கான காரணத்தை கண்டறியுமாறு சமயநல்லூர் காவல்நிலையத்தில் 2011 ஆகஸ்ட் 3-ல் புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் மதுரை 4 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திóல வழக்கு தொடர்ந்தேன். அதன் பேரில், சமயநல்லூர் போலீஸார் விசாரித்து 2012 மார்ச் 7-க்குள்  அறிக்கை தாக்கல் செயய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போலீஸôர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி மணிக்குமார் விசாரித்தார். மாஜிஸதிரேட் உத்தரவை ஏன் பின்பற்றவில்லை என்பதற்கு நேரில் ஆஜராகி விள்க்கமளிக்குமாறு  ஊரக காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT