சேலத்தில் தங்கும் விடுதி ஒன்றில் காசு வைத்து சூதாடியதாக தொழிலதிபர்கள் உள்ளிட்ட 13 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:
சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக அழகாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர்கள் சரோஜா, பாபு ஆகியோர் தலைமையில் சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்ற காவல்துறையினர், அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விடுதியின் மேலாளர் தி.பாபு (42), ஓசூர் லோகேஷ் (33), சேலம் சுரேஷ் (58), சக்திவேல் (51), மணிகண்டன் (30), ஜெகதீசன் (60), முருகன் (50), சோமசுந்தரம் (54), ரமேஷ் (54), முருகானந்தம் (48), துரைசாமி (66), தேவராஜ் (34), துரைசாமி (52) ஆகிய 13 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட 1.43 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் சேலம் 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.