நடந்து சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பு
கோபி கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி சரோஜினி (54). இவர்கள் கோபி ஜெ.ஜெ., நகரில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.
கோபி கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி சரோஜினி (54). இவர்கள் கோபி ஜெ.ஜெ., நகரில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.
கட்டிட பணியை பார்த்துவிட்டு புதன்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத வந்த நபர்கள், சரோஜினியிடம் இருந்து 5 பவுன் நகையை பறித்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர்.
இது குறித்து கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.