முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: 5 பேர் கைது

தருமபுரி பகுதியில் இன்று தொடங்கிய ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளை அளிப்பதாகக் கூறி சிலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

தருமபுரி பகுதியில் இன்று தொடங்கிய ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளை அளிப்பதாகக் கூறி சிலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே நடலேரிப்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளை அளிப்பதாகவும் அதற்கு பணம் தருமாறும் கேட்டுப் பெற்றனர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கணபதி மற்றும் அவர் மனைவி எஸ்தர் ஆகியோர். இவர்களுடன், இளையராஜா, சந்திரசேகரன் கிருஷ்ணப்பா மூவரும் சேர்ந்து இவ்வாறு பலரிடம் பணம் பெற்றுள்ளனராம். ஆனால், இன்று தேர்வு தொடங்கியும் வினாத்தாள் எதுவும் தராமல் ஏமாற்றியுள்ளனர். இதை வலியுறுத்திக் கேட்டபோது, இன்று வாங்கிக் கொள் என்று சொன்னார்களாம். இது குறித்து அசோக்குமார் அளித்த புகாரின் பேரில், இன்று ஐவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது ஆனால் அவர்களிடம் இருந்து வினாத்தாள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.