முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை

மதுரை திருநகரில் உள்ள இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளிக்கு இன்று காலை மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில், பள்ளியில் வெடிகுண்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:18 PM
பகிர்:

மதுரை திருநகரில் உள்ள இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளிக்கு இன்று காலை மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து போலீஸாருக்கு பள்ளியில்  இருந்து தகவல் அளித்தனர். அதன் பேரில், பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர்.

மேலும், திருநகர் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத் தங்கியுள்ளார். அவர் தங்கியிருக்கும் பகுதியில் இந்தப்பள்ளி உள்ளதால், போலீஸார் இந்தக் கடிதம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.