விருதுநகர் அருகே கேப் ஒர்க்ஸில் தீ விபத்து: 4 பேர் காயம்
விருதுநகர் அருகே உள்ளது முதலிப்பட்டி. இங்கு ஈ சொக்கலிங்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி கேப் ஒர்க்ஸ்ஸில், இயந்திரம் மூலம் பட்டாசு தயார் செய்யும் போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில்,
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:53 PM
விருதுநகர் அருகே உள்ளது முதலிப்பட்டி. இங்கு ஈ சொக்கலிங்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி கேப் ஒர்க்ஸ்ஸில், இயந்திரம் மூலம் பட்டாசு தயார் செய்யும் போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், அழகுமாரி, தமிழ்ச்செல்வி, முருகேஸ்வரி, திரிசங்கு என நான்கு பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் சிவகாசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வத்தக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.