அதிமுகவைச் சேர்ந்த 4 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி நீக்கம்
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காவாலக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி ராஜாங்கம், பி.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேமலதா ராமமூர்த்தி,
நிதிமுறைகேடு செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த 4 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காவாலக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி ராஜாங்கம், பி.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேமலதா ராமமூர்த்தி, பேரூர் ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா சுபாஷ்சந்திரபோஸ், வெய்யலூர் சாந்தி உலகநாதன் ஆகிய 4 பேர் கடலூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் நிதிமுறைகேடு, நிதியை தவறாக பயன்படுத்தியது, நிதியை கையாடல் செய்தது ஆகிய குற்றங்களுக்காக தமிழக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட 4 ஊராட்சி மன்றத் தலைவர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.