முகப்பு
தற்போதைய செய்திகள்

கீழணையை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:24 PM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஏரிக்கு நீர் வரும் நீராதாரமான காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள அணைக்கரையில் கீழணைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அணைக்கரையில் உள்ள கீழணையில் உள்ள இரு ஷட்டர்கள் சமீபத்தில் பழுதடைந்ததால் நீர் வீனாக கொள்ளிடம் வழியாக கடலில் கலந்தது.  அதன் பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு ஷெட்டர்கள் சீரமைக்கப்பட்டு மூடப்பட்டது.  இரு அமைச்சர்களும் கீழணையில் பழுதடைந்து சீரமைக்கப்பட்ட ஷட்டர்களை பார்வையிட்டனர். மேலும் ஏரிக்கு நீர் அனுப்பப்படும் வடவாறு பாதையினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆண்டு தோறும் ஷட்டர்களை பராமரித்து நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர்கள் தெரிவித்தனர்.  அமைச்சர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஏம்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →