ஆரம்பாக்கத்தில் 1 டன் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உட்பட போலீஸார் இரவு ரோந்துப் பணியில்
தற்போதைய செய்திகள்ஆரம்பாக்கத்தில் 1 டன் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உட்பட போலீஸார் இரவு ரோந்துப் பணியில்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 1 டன் மதிப்புள்ள செம்மர கட்டைகள் ஆரம்பாக்கம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உட்பட போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆரம்பாக்கம் பகுதியில் சர்வீஸ் சாலை வழியே சுரங்கப்பாதையில் லோடு வண்டி நின்றுக் கொண்டிருந்தது. அந்த லோடு வண்டியை போலீஸார் நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது லோடு வண்டியில் இருந்து சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் வண்டியை நிறுத்தி ஓட்டம் பிடித்தார்.போலீஸார் வண்டியை சோதனையிட்ட போது வண்டியின் அடியில் செம்மரத் கட்டைகள் பதுக்கப்பட்டு அதன் மேல் தார்பாயும் அதன் மேலே தண்ணீர் பாக்கெட் மூட்டைகளும் அடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீஸார் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட அந்த லோடு வண்டியை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த லோடு வண்டியில் 3 முதல் 7 அடி வரை 26 செம்மர கட்டைகள் இருந்தது. சுமார் 1 டன் எடையுள்ள அந்த செம்மர கட்டைகளின் மதிப்பு 1 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என்றும் ஆரம்பாக்கம் அருகே ஆந்திர மாநிலம் இருப்பதால் ஆந்திர மாநில காடுகளில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.