முகப்பு
தற்போதைய செய்திகள்

கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் மரணம்

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் புதன்கிழமை இரவு கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார். அவரது உறவினர் படுகாயம் அடைந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:26 PM
பகிர்:

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் புதன்கிழமை இரவு கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார். அவரது உறவினர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே உள்ள லால்புரத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (60). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் தனது உறவினர் சுகுமாறனுடன் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு புறவழிச்சாலையில் ராகவேந்திரா கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுகுமாறன் (39) படுகாயம் அடைந்து அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →