தற்போதைய செய்திகள்

விதிமுறை மீறி நோட்டீஸ் ஒட்டிய திமுக பிரமுகர் மீது வழக்கு

மதுரை 4 ஆம் பகுதி திமுக பகுதிச்செயலராக இருப்பவர் ஜெயராமன். சமீபத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க மதுரை வந்தபோது அவரை வரவேற்று போஸ்டர்கள்

ஜெயப்பாண்டி

விதிமுறை மீறி நோட்டீஸ் ஒட்டியதாக மதுரை திமுக பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

மதுரை 4 ஆம் பகுதி திமுக பகுதிச்செயலராக இருப்பவர் ஜெயராமன். சமீபத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க மதுரை வந்தபோது அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதில் ஜெயராமன் சார்பில் போஸ்டர்கள் மாநகர் காவல் துறை போக்குவரத்து தடுப்புகள் மீது ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அவர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். மதுரை நகரில் திமுக நிகழ்ச்சிகளின் போது அனுமதியின்றி மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகச் சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டியதாக திமுக பிரமுகர் ஜெயராமன் மீது பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT