முகப்பு
தற்போதைய செய்திகள்

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கத்தைச் சேர்ந்தவர் மாபுத்கான். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், 2006-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி கெலமங்கலத்தில் ஏற்பட்ட

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:05 PM
பகிர்:

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுபடி கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை அரசு நகரப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கத்தைச் சேர்ந்தவர் மாபுத்கான். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், 2006-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி கெலமங்கலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மாபுத்கான் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்துக் கழகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மகனை இழந்த தந்தை அமித்கான், கிருஷ்ணகிரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சம்பத், பாதிக்கப்பட்டவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.4.54 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்கவில்லை என்றால் அரசு நகரப் பேருந்தை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்துக்கு சென்று நீதிமன்ற ஊழியர்கள், கெலமங்கலத்துக்கு செல்ல தயாராக இருந்த அரசு நகரப் பேருந்தை ஜப்தி செய்து முறைப்படி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →