முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பல்கலை. மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்செங்கோட்டைச் சேர்ந்த செல்லப்பன் மகன் மணிகண்டன் (22). இவர் சிதம்பரம் மாரியப்பாநகரில் தனியாருக்கு சொந்த வீட்டில் அறை எடுத்து தங்கி எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

சிதம்பரத்தில் தனியார் அறையில் தங்கியிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செங்கோட்டைச் சேர்ந்த செல்லப்பன் மகன் மணிகண்டன் (22). இவர் சிதம்பரம் மாரியப்பாநகரில் தனியாருக்கு சொந்த வீட்டில் அறை எடுத்து தங்கி எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை அவரது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகாமையில் அறையிலிருந்தவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர் மணிகண்டன், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.