நிறுத்தாமல் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்: இந்து ஆலய பாதுகாப்புக்குழு கண்டனம்
இந்து ஆலய பாதுகாப்புக்குழு அவரச ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.செங்குட்டுவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜோதி
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டத்தில் ஸ்ரீநடராஜர் தேரை நிறுத்தாமல் தேரோட்டம் நடத்துவது என்ற முடிவிற்கு இந்து ஆலய பாதுகாப்புக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து ஆலய பாதுகாப்புக்குழு அவரச ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.செங்குட்டுவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜோதி குருவாயூரப்பன், பாலகிருஷ்ணன், நாச்சியப்பன், செல்வி, சங்கரமூர்த்தி, குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேரோட்டத்தின் போது நடராஜர் தேரில் பொதுப்பணித்துறை கூறிய மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டும்; தொன்று தொட்டு நடைபெறும் பழக்கவழக்கத்தை மாற்றி வீதிகளில் பக்தர்களின் மண்டகப்படிக்கு தேரை நிறுத்தாமல் தேரோட்டம் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறோம்; நடராஜர் தேர் நிறுத்தாமல் தேரோட்டம் நடத்தப்படுவதால் பக்தர்கள் காலையிலேயே நடராஜரை தேரில் தரிசனம் செய்ய வேண்டுகிறோம்; தேர் எந்த இடத்திலும் கட்டளை (மண்டகப்படி) நிறுத்தாமல் தேரோட்டம் நடத்துவதால் பக்தர்களும், உபயதாரர்களும் கடும் அதிருப்தியும், மனவேதனையும் அடைந்துள்ளனர்