முகப்பு
தற்போதைய செய்திகள்

ரேஷன் பொருள்கள் சரியாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோயிலில் ரேஷன் பொருள்கள் சரியாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடங்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோயிலில் ரேஷன் பொருள்கள் சரியாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் பெரியார்நகர் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பொருள்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்றும், பொருள்கள் வழங்காத விற்பனையாளரை மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 30 பெண்கள் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்த ஞானவிநாயகர் தொடக்க வேளாண் விற்பனை சங்க செயலாளர் சாமிநாதன், வட்டவழங்கல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பொருள்களும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக வழங்கியதால் போராட்டத்தை அப்பகுதி மக்கள் வாபஸ் பெற்றனர். இதனால் சுமார் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.