சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் விஜயகாந்த் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்
சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் குடும்பத்தினருடன் எவ்வித முன்னறிவிப்பின்றி செவ்வாய்க்கிழமை வருகை தந்து சாமி தரிசனம்
சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் குடும்பத்தினருடன் எவ்வித முன்னறிவிப்பின்றி செவ்வாய்க்கிழமை வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகிய நால்வரும் மாலை 3 மணிக்கு எவ்வித முன்னறிவிப்பின்றி வருகை தந்து தில்லைக்காளிக்கு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக 19-வது வார்டு தேமுதிக செயலாளர் மற்றும் மணிவாசக தீட்சிதர் உள்ளிட்டோர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். விஜயகாந்த் குடும்பத்தினர் தில்லைக்காளிக்கு நல்லெண்ணெய், மஞ்சள், குங்குமம், எலுமிச்சை மாலை, வெட்டிவேர் மாலை ஆகியவற்றை வழங்கினர்.
பின்னர் தில்லைக்காளிக்கு எண்ணெய், பால், சந்தனம் உளளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, குங்குமம், எலுமிச்சை மாலை, வெட்டிவேர் மாலை, புடவை சாற்றப்பட்டு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. தனது மகன் நடித்த சகாப்தம் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என விஜயகாந்த் குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்துவிட்டு மாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்றார்.