முகப்பு
தற்போதைய செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 38 பேர் மீது வழக்கு

கடலூர் அருகே பெரியகங்கணாங்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுதியிருந்த சுவர் விளம்பரங்கள் வெள்ளிக்கிழமை காலை தார் பூசி அழிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்தும்,

Updated On : 29 டிசம்பர், 2013 at 2:51 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:59 AM

கடலூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் உட்பட 38 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடலூர் அருகே பெரியகங்கணாங்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுதியிருந்த சுவர் விளம்பரங்கள் வெள்ளிக்கிழமை காலை தார் பூசி அழிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்தும், சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி மாவட்டச் செயலர் தாமரைச்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் கட்சியினர் கடலூர்- புதுச்சேரி சாலையில் மறியல் போராட்த்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

போக்குவரத்தை தடை செய்தது தொடர்பாக, தாமரைச்செல்வன் உள்ளிட்ட 38 பேர் மீது ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விளம்பரம் அழிக்கப்பட்டது தொடர்பாக, அக்கட்சியின் முகாம் செயலர் பாரதி கொடுத்த புகாரின் பேரில் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.