முகப்பு
தற்போதைய செய்திகள்

மாடியில் இருந்து விழுந்து புதுவை முன்னாள் முதல்வர் மரணம்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப.சண்முகம், மாடியில் இருந்து இறங்கும்போது படிக்கட்டில் தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:16 AM
பகிர்:

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப.சண்முகம், மாடியில் இருந்து இறங்கும்போது படிக்கட்டில் தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை மரணம் அடைந்தார்.

புதுவை முதல்வராக இரு முறை பதவி வகித்தவர் ப.சண்முகம்(86). காங்கிரஸ் மூத்த தலைவராகத் திகழ்ந்தவர். எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

இவர் காரைக்காலை அடுத்துள்ள நெடுங்காடு என்னும் இடத்தில் உள்ள அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை அவர், மாடியில் இருந்து இறங்கி வந்தபோது, படிக்கட்டில் கால் இடறி, தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவர், நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் புதுச்சேரி மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் பட்டிருந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →