முகப்பு
தற்போதைய செய்திகள்

இளமையாக்கினார் கோயிலில் வரலாற்று உற்சவம்

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரர் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா திங்கள்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வரலாற்று உற்சவத்தை

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:18 AM
பகிர்:

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரர் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா திங்கள்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வரலாற்று உற்சவத்தை கண்டு தரிசித்தனர்.

திருத்தல வரலாற்று உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி வீதிஉலா மற்றும் திருவோடு கொடுத்தல் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை பகல் சுவாமி வீதிஉலா வந்த பின்னர் கோயில் குளக்கரையில் சிவபெருமான் சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாறறு நிகழ்ச்சி நடைபெற்றது.  சுரேஷ்குருக்கள், உ.வெங்கடேசதீட்சிதர் உள்ளிட்டோர் வரலாற்று நிகழ்வுகளை நடத்தினர்.

இதனை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு யெளவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காரைக்குடி பெரி.மெ.பழனியப்ப செட்டியார் மற்றும் அவரது குடும்பத்தார்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →