முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் படுகாயம்

வந்தவாசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராம்பிரசாத் (24) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கே.ஆர்.எம்.ஹாஸ்டலில் தங்கி இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:19 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் செவ்வாய்க்கிழமை மாலை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

வந்தவாசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராம்பிரசாத் (24) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கே.ஆர்.எம்.ஹாஸ்டலில் தங்கி இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவரும் முத்தையாநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் அஸ்வின்குமார் (22) ஆகிய இருவரும் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் பல் மருத்துவக்கல்லூரி வழியாக முத்தையாநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடம் வழியாக பலமருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இவ்விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →