முகப்பு
தற்போதைய செய்திகள்

வயலில் எரிந்த நிலையில் முதாட்டியின் உடல்

கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் காலனி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம் மனைவி முனியம்மாள். இவர்களுக்கு தொம்பரை, மோகன், ராமலிங்கம் ஆகிய மகன்களும் அலங்காரம், பத்மா

தற்போதைய செய்திகள்

வயலில் எரிந்த நிலையில் முதாட்டியின் உடல்

கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் காலனி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம் மனைவி முனியம்மாள். இவர்களுக்கு தொம்பரை, மோகன், ராமலிங்கம் ஆகிய மகன்களும் அலங்காரம், பத்மா

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:19 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் என்ற பகுதியில் வயலில் எரிந்த நிலையில் முனியம்மாள்(75) என்பவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் காலனி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம் மனைவி முனியம்மாள். இவர்களுக்கு தொம்பரை, மோகன், ராமலிங்கம் ஆகிய மகன்களும் அலங்காரம், பத்மா கணவர் என்ற மகள்களும் உள்ளனர். முனியம்மாள் அவரது மகன்களின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்களன்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முனியம்மாள் அதிகாலை 3 மணிக்கு மேல் எழுந்து வெளியே சென்றிருக்கிறார். இந்நிலையில் அதிகாலை சேகண்யம் காலனி அருகே இருந்த வயல் வழியே சென்றவர்கள் பட்டுப்புளி பகுதியை சேர்ந்த வனராஜ் என்பவரின் வயலில் ஏதோ எரிந்துக் கொண்டிருப்பதையும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும் கண்டு அருகில் சென்று பார்த்த போது ஒரு உடல் கருகிய நிலையில் எரிந்துக் கொண்டிருப்பதை கண்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது கருகிய உடலின் காலில் இருந்த செருப்பை வைத்து அது முனியம்மாள் என அவரது மகன்கள் கூறினர். இது குறித்து முனியம்மாளின் மூத்த மகன் தொம்பரை அளித்த புகாரில் கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →