65 லட்சம் மதிப்புள்ள துருப்பிடிக்காத எக்கு தகடுகள் திருட்டு- இருவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியில் பிரபலமான துருப்பிடிக்காத எக்கு தகடுகள் தயாரிக்கும் வடநாட்டு தொழிற்சாலையின் கிடங்கு உள்ளது. ஒடிசா, அசோம்
தற்போதைய செய்திகள்65 லட்சம் மதிப்புள்ள துருப்பிடிக்காத எக்கு தகடுகள் திருட்டு- இருவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியில் பிரபலமான துருப்பிடிக்காத எக்கு தகடுகள் தயாரிக்கும் வடநாட்டு தொழிற்சாலையின் கிடங்கு உள்ளது. ஒடிசா, அசோம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் பகுதியில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் இருந்து சுமார் 65 லட்சம் மதிப்பிலான துருப்பிடிக்காத எக்கு தகடுகள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கவரப்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியில் பிரபலமான துருப்பிடிக்காத எக்கு தகடுகள் தயாரிக்கும் வடநாட்டு தொழிற்சாலையின் கிடங்கு உள்ளது. ஒடிசா, அசோம் மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட துருப்பிடிக்காத எக்கு தகடுகள் இங்கு கொண்டு வரப்பட்டு பின் தேவையான அளவு சுருள் தகடுகளாக அவை துண்டிக்கப்பட்டு லாரிகளின் மூலம் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.இந்நிலையில் இந்த குடோனில் இருந்து சுமார் 30 டன் எடையுள்ள 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு தகடுகள் மாயமானது குறித்து இந்த குடோனின் மேலாளர் சூர்யபிரகாஷ் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜோஷ் தங்கையா, இன்ஸ்பெக்டர் அசோக் மேத்தா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இந்த திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த குடோனில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த முன்னாள் ஊழியரான திருவாலங்காட்டை சேர்ந்த கிருஷ்ணானந்தம்(32), தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த வியாபாரி மாயன்(43) ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த 30 டன் துருப்பிடிக்காத எக்கு தகடுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இவர்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.விசாரணையில் குடோனில் இருந்த கண்காணிப்பு கேமிராவை அணைத்து விட்டு இரு லாரிகளில் இவர்கள் இரும்பு தகடுகளை திருடியது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.