தூத்துக்குடியில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
தூத்துக்குடி மாப்பிளையூரணி அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் வங்கி ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுதா (19), இவர் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தூத்துக்குடி அய்யனடைப்பு அருகேயுள்ள ஸ்ரீனிநகர் பகுதியைச் சேர்ந்தவர்
தற்போதைய செய்திகள்தூத்துக்குடியில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
தூத்துக்குடி மாப்பிளையூரணி அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் வங்கி ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுதா (19), இவர் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தூத்துக்குடி அய்யனடைப்பு அருகேயுள்ள ஸ்ரீனிநகர் பகுதியைச் சேர்ந்தவர்
தூத்துக்குடியில் இளைஞர் ஒருவரும், கல்லூரி மாணவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். காதல் விவகாரத்தில் இந்த தற்கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாப்பிளையூரணி அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் வங்கி ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுதா (19), இவர் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தூத்துக்குடி அய்யனடைப்பு அருகேயுள்ள ஸ்ரீனிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கௌதம் (19). இவர் அய்யனடைப்பு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா சன்னாசி வீட்டில் தங்கியிருந்து மடத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். முருகேசனும், முத்துசாமியும் உறவினர்கள் ஆவர்.
இந்நிலையில், மடத்தூரில் உள்ள தொழிற்சாலையில் இருந்த கௌதம் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அந்தப் பகுதியில் வேலை செய்தி கொண்டிந்தவர்கள் கௌதமை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே கௌதம் உயிரிழந்தார்.இதையெடுத்து, கௌதம் உடலை அடக்கம் செய்யும் வேலையில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனராம். கௌதம் இறந்த தகவல் வெளியான நிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய சுதா சண்முகபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.தகவலறிந்ததும் சிப்காட் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இளைஞரும், கல்லூரி மாணவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
சுதாவும், கௌதமும் உறவினர்கள் என்பதால், இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் சுதாவின் தந்தை முருகேசனுக்கு பிடிக்கவில்லை. இதனால் காதல் ஜோடிகள், தங்களது காதலுக்கு எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தவுடன், கௌதம் தனது தந்தை முத்துசாமியிடம் திருமணம் செய்து வைக்குமாறு முறையிட்டுள்ளார். கோவையில் உள்ள முத்துசாமி தூத்துக்குடிக்கு வந்து முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் முருகேசன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.இந்த விபரம் கௌதமுக்கு தெரியவரவே, தான் வேலை பார்க்கும் மில்லில் வைத்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். காதலன் இறந்ததில் மனம்முடைந்த சுதா வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாராம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.