முகப்பு
தற்போதைய செய்திகள்

தை அமாவாசை: காரைக்கால் கடற்கரையில் தீர்த்தவாரி

தை அமாவாசையையொட்டி காரைக்கால் கடற்கரையில் ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் ஆகியோர் ஒருசேர எழுந்தருளினர். கடற்கரையில் சுவாமிகளின் தீர்த்தவாரி நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:22 AM
பகிர்:

தை அமாவாசையையொட்டி காரைக்கால் கடற்கரையில் ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் ஆகியோர் ஒருசேர எழுந்தருளினர். கடற்கரையில் சுவாமிகளின் தீர்த்தவாரி நடைபெற்றது.

தை மாத அமாவாசையில் கடலில் முங்கி எழுந்து, கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது ஆண்டு தோறும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு சனிக்கிழமை தை அமாவாசையையொட்டி காரைக்கால் கடல் பகுதியில் ஏராளமான பக்தர்கள் காலையில் நீராடி சுவாமி வழிபாடு செய்தனர்.

பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் வகையில் காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் இருந்து ஸ்ரீ சுந்தராம்பாள் சமேதராக ஸ்ரீ கைலாசநாதரும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் இருந்து உற்ஸவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளும் தனித்தனி பல்லக்கில் கடற்கரைக்கு எழுந்தனருளினர். இன்று காலை 6.15 மணியளவில் கடலில் பக்தர்களுக்கு தீர்த்தவாரி தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது..

சிவன் மற்றும் வைணவத் திருக்கோவில்களில் இருந்து சுவாமிகள் ஒன்றாகப் புறப்பாடு கண்டருளி, கடற்கரைக்கு எழுந்தருளவது, தை அமாவாசையில் மட்டுமே என்பதால், ஏராளமான பக்தர்கள் கடற்கரைக்கு சென்று வழிபட்டனர்.

தீர்த்தவாரி முடிந்து கோவிலுக்கு புறப்பட்ட சுவாமிகளுக்கு வீதிகளில், பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இவ்விரு  கோவில்களின் தனி அலுவலர் கோவி. ஆசைத்தம்பி செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →