முகப்பு
தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் இரு வீடுகளில் நகை பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முனுசாமி(37). இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை முனுசாமியின் மனைவி நீலாவதி அவரது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள அவரது தங்கையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்

தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் இரு வீடுகளில் நகை பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முனுசாமி(37). இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை முனுசாமியின் மனைவி நீலாவதி அவரது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள அவரது தங்கையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகர் பகுதியில்  நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு பூட்டிக்கிடந்த இரு வீடுகளில் மர்ம நபர்கள் 32 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முனுசாமி(37). இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை முனுசாமியின் மனைவி நீலாவதி அவரது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள அவரது தங்கையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் முனுசாமி தொழிற்சாலைக்கு இரவு பணிக்காக வீட்டை பூட்டி சென்றிக்கிறார்.இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிய முனுசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோ கதவும் திறக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ந்து பீரோவில் பார்த்ததில் பீரோவில் இருந்த 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 30 சவரன் நகைகள் திருடப்பட்டது அறிந்து இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,

அதே போல இதே விவேகானந்தா நகர் 4வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் விஜயகுமார்(22). தனியார் தொழிற்சாலையில் டிரைவராக பணிபுரியும் இவர் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் இவரது வீடு புகுந்து வீட்டின் பீரோவில் இருந்த இரண்டேகால் சவரன் நகைகள் திருடி சென்றுள்ளனர்.இன்று காலை வீடு திரும்பிய விஜயகுமார் தனது வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றதை அறிந்து இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்தும் கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →