முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலை பல்கலை மாணவர் மாயம்: போலீஸார் வழக்குப் பதிவு

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா கலிவாலகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (58). இவரது மகன் ராஜேந்திரன் (27) சிதம்பரம் அண்ணாமலைநகர் ஒ.பி மெயின்ரோட்டில் சகுந்தலா இல்லத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:26 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் காணமல் போனது குறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா கலிவாலகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (58). இவரது மகன் ராஜேந்திரன் (27) சிதம்பரம் அண்ணாமலைநகர் ஒ.பி மெயின்ரோட்டில் சகுந்தலா இல்லத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்.6-ம் தேதி மாலை மாணவர் ராஜேந்திரன் வெளியே சென்றவர் அறைக்கு திரும்பவில்லை. 2 தினங்கள் தேடி பார்த்துவிட்டு அவரது நண்பர்கள், மாணவரின் தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவரது தந்தை ராஜேந்திரன் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில்  தனது மகனை கடந்த பிப்.6-ம் தேதி முதல் காணவில்லை என புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →