தற்போதைய செய்திகள்

கோவை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள முதலிபாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி என்பவரது மகன் செந்தில்பிரபு( 29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலைஅவருடைய நண்பர்கள் 2 பேர்களூடன் வெளியில்

தினமணி

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள முதலிபாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி என்பவரது மகன் செந்தில்பிரபு( 29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலைஅவருடைய நண்பர்கள் 2 பேர்களூடன் வெளியில் சென்றார். வெகுநேரமாகியும் செந்தில் பிரபு வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் முதலிபாளையம் பிரிவில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக  சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலையுண்ட வாலிபர் யார்? என்று விசாரித்ததில் அவர் முதலிபாளையத்தை சேர்ந்த செந்தில்பிரபு என்பது தெரிய வந்தது. அவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது யார்? என்பதை அறிய தீவிர விசாரணையில் இறங்கினர். செந்தில்குமாரை வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்ற 2 வாலிபர்களும் தலைமறைவாகி இருப்பதும் தெரிய வந்தது. கொலையாளிகளை கைது செய்ய போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT