தற்போதைய செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் கடந்த 6-ம் தேதி இயங்கத் தொடங்கியது. சுமார் 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், எந்திரக் கோளா

க. தங்கராஜா

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் எந்திரம் பழுதடைந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் கடந்த 6-ம் தேதி இயங்கத் தொடங்கியது. சுமார் 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், எந்திரக் கோளாறு காரணமாக 9-ம் தேதி உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பழுது சரிபார்க்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை இரவு 11.45 மணியளவில் மின் நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. எதிர்பாராதவிதமாக இன்று(செவ்வாய்க்கிழமை) நண்பகலில் பாய்லரில் பழுது ஏற்பட்டது. இதனால் மின்சார உற்பத்தி தொடங்கும் முன்னரே அனல் மின் நிலையம் மீண்டும் நிறுத்தப்பட்டது.தற்போது ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய குறைந்தது 2 நாள்கள் ஆகும் என்றும் அதன் பிறகு மீண்டும் அனல் மின் நிலையத்தை இயங்க வைக்க முயற்சிகள் நடைபெறும் என்றும் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT