தற்போதைய செய்திகள்

முட்டை கொள்முதல் விலை உயர்ந்து ரூ.3.73 ஆக நிர்ணயம்

வரலாறு காணாத அளவில் நாமக்கல் மண்டல முட்டை பண்ணைக் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை மேலும் 3 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.73ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச்செல்வன்

வரலாறு காணாத அளவில் நாமக்கல் மண்டல முட்டை பண்ணைக் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை மேலும் 3 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.73ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பரவலாக முட்டை நுகர்வு உயர்ந்துள்ளதாலும், வடமாநிலங்களில் விலை அதிகரித்து வருவதாலும் இவ்விலையேற்றம் செய்யப்படுவதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவி்த்துள்ளது.

விலையேற்றம் காரணமாக வடமாநிலங்களில் முட்டை நுகர்வு குறைந்து விலையிலும் சரிவு ஏற்பட்டதால் கடந்த மாதம் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைக்கப்பட்டு வந்தது. அதன்படி, ஜனவரி 23-ல் ரூ.3.42ஆக இருந்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 24-ம் தேதி ரூ.3.20ஆக குறைக்கப்பட்டது. பின்னர், கடுமையான குளிர் காரணமாக தமிழகம், கேரள மாநிலங்களில் முட்டை விற்பனை அதிகரிக்கத் தொடங்கின. தவிர, வட மாநிலங்களிலும் விற்பனை அதிகரித்து விலையும் உயர்த்தப்பட்டு வந்ததால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டைக் கொள்முதல் விலையை உயரத்தொடங்கியுள்ளது.

இதன்படி, கடந்த பிப்ரவரி 11-ம் தேதி வரலாறு காணாத அளவில் ரூ.3.70ஆக முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, வியாழக்கிழமை மேலும் 3 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.73ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரம் சாதகமாக இருப்பதால் முட்டை கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT