தற்போதைய செய்திகள்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் தேரோட்டம்

இக்கோவிலில் கடந்த 16ம்தேதியன்று மாசிமகபெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் தினநதோறும் காலை,மாலை வேளையில் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதிஎழுந்தருளல்,சமய சொற்பொழிவு,அபிஷேக தீபாராதனை,மண்டகபடி தீபாராதனை நடைபெற்றது. விழாவின் 9ம்நாளான ஞாயிற்றுகிழமை காலையில் சுவாமி,அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும்,தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.முதலாவதாக சுவாமி தேரும்,

பா.​ பிரகாஷ்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் மாசிமகபெருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோவிலில் கடந்த 16ம்தேதியன்று மாசிமகபெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் தினநதோறும் காலை,மாலை வேளையில் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதிஎழுந்தருளல்,சமய சொற்பொழிவு,அபிஷேக தீபாராதனை,மண்டகபடி தீபாராதனை நடைபெற்றது. விழாவின் 9ம்நாளான ஞாயிற்றுகிழமை காலையில் சுவாமி,அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும்,தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.முதலாவதாக சுவாமி தேரும், அதனையடுத்து அம்பாள் தேரும் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சிறப்பு சொற்பொழிவு,மண்டகபடி தீபாராதனை நடைபெற்றது. இரவில் கனகபல்லக்கில் சுவாமி-அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.தேரோட்டம் விழாவில் கோவில் செயலர்அலுவலர் ர.கணபதிமுருகன், நகர அதிமுக செயலர் எஸ்.முத்துகுமார்,நகர ஜெ.பேரவை செயலர் ஆர்.முருகன்ராஜ்,மாநிலபொதுக்குழு உறுப்பினர் ஷமீம், மாவட்ட அமைப்புசாரா அணி தலைவர் கண்ணன், அதிமுக மாவட்டபிரதிநிதி மாரிமுத்து,சுப்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT