தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 11 மணி நேரம் மின்தடை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள உபமின் நிலையத்தில் 16 எம்பிஏ மின்மாற்றியை 25 எம்பிஏ மின்மாற்றியாக திறன் உயர்த்தும் பணி நடைபெறுவதால் மாநகரில் 11 மணி நேர மின்தடை ஜனவரி 11-ம் தேதி வரை மாற்றம்
தற்போதைய செய்திகள்தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 11 மணி நேரம் மின்தடை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள உபமின் நிலையத்தில் 16 எம்பிஏ மின்மாற்றியை 25 எம்பிஏ மின்மாற்றியாக திறன் உயர்த்தும் பணி நடைபெறுவதால் மாநகரில் 11 மணி நேர மின்தடை ஜனவரி 11-ம் தேதி வரை மாற்றம்
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நாளொன்றுக்கு 11 மணி நேரம் மின்தடை இருக்கும் என்றும் மின்தடை குறித்த நேரங்கள் விவரத்தையும் மின்வாரிய அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள உபமின் நிலையத்தில் 16 எம்பிஏ மின்மாற்றியை 25 எம்பிஏ மின்மாற்றியாக திறன் உயர்த்தும் பணி நடைபெறுவதால் மாநகரில் 11 மணி நேர மின்தடை ஜனவரி 11-ம் தேதி வரை மாற்றம் செய்யப்ட்டுள்ளது .அண்ணாநகர், மகிழ்ச்சிபுரம், வி.வி.டி. பிரதான சாலை, பழைய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பாலவிநாயகர்கோயில்தெரு, வி.இ. சாலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் 5 வரை மற்றும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை, இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது.
தெப்பகுளம், சிவன் கோயில் தெரு, சிவந்தாகுளம் பிரதான சாலை, டபிள்யூஜிசி சாலை, தாமோதரநகர் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் இரவு 1 மணி வரையும், அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையும், காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது.ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 1 மணி முதல் 2 மணி வரையும், அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையும், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது.
குறிஞ்சிநகர், அன்னை தெரசா நகர், ராஜீவ்நகர், மில்லர்புரம், ஹெச்பி காலனி, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், சுப்பையா முதலியார்புரம், திருச்செந்தூர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு 2 மணி முதல் 3 மணி வரையும், அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும், 11 மணி முதல் 12 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.