முகப்பு
தற்போதைய செய்திகள்

யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், விளாங்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த சின்னவீரன் என்பவரின் மனைவி பொம்மி, 29.12.2012 அன்று வண்ணான்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பெரிய தடாகம் கிராமம் அமராவதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் பழனிச்சாமி 30.12.2012 அன்று ஒதுக்குக்காடு அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், வீரபாண்டி கிராமம், மூலக்காடு என்ற இடத்தில் 1.1.2013 அன்று நாயக்கன்பாளையம் பாலமலையினைச் சேர்ந்த ஊசி என்பவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். அவருடன் சென்ற வீரபாண்டி கிராமம், மருதங்கரையைச் சேர்ந்த சங்கன் என்பவர் யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காட்டு யானைகள் தாக்கியதில் அகால மரணமடைந்த பொம்மி, பழனிச்சாமி, ஊசி மற்றும் சங்கன் ஆகியோர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, துயரச் சம்பவங்களில்  காலமான நான்கு பேரின் குடும்பங்களுக்கு வனத் துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →