அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்
செய்திக் குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு பணியாளர்களுக்கான மாவட்ட
தற்போதைய செய்திகள்அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்
செய்திக் குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு பணியாளர்களுக்கான மாவட்ட
தூத்துக்குடி மாவட்ட அளவிலான அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை (ஜனவரி 10) தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.அரசு பணியாளர்களுக்கு மாற்றத்தை கொடுத்து புதிய உத்வேகத்தை உருவாக்கவும், குழு மனப்பான்மையையும், ஒற்றுமை உணர்வை உருவாக்கவும், மாவட்ட நிர்வாகத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தவும் மாவட்ட அளவிலான அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஆண்கள், பெண்களுக்கு 30 வயதுக்குள்பட்டோர், 40 வயதுக்குள்பட்டோர், 50 வயதுக்குள்பட்டோர், 50 வயதுக்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 100 மீட்டர் ஓட்டம், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், நடைபோட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.எனவே போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தூத்துக்குடி விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.