முகப்பு
தற்போதைய செய்திகள்

நெற்பயிர்கள் கருகுவதால் நீரை திறந்துவிடக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காவிரி டெல்டா பகுதியின் கடை, மடை பகுதியான பிச்சவாரம், கீழச்சாவடி, மேலசாவடி, கிள்ளை உட்பட 30 மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி நெற்கதிர் வரும் தருவாயில், பயிர்கள் கருகி வருவதால், கீழணையிலிருந்து  தண்ணீர் திறந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளில் நீரின்றி சம்பா நெற்பயிர்கள் கருகி வருவதால், ஆத்திரமடைந்த விவசாயிகள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காவிரி டெல்டா பகுதியின் கடை, மடை பகுதியான பிச்சவாரம், கீழச்சாவடி, மேலசாவடி, கிள்ளை உட்பட 30 மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி நெற்கதிர் வரும் தருவாயில், பயிர்கள் கருகி வருவதால், கீழணையிலிருந்து  தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து கோரியுள்ளனர். தண்ணிர் திறக்க முடியாது என்றும், தண்ணீரை தேக்கி வைக்க அரது உத்திரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் கண்ணன் தலைமையில் கான்சாகிப் வாய்க்கால் விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் சிதம்பரம்-பிச்சாவரம் செல்லும் சாலையில் மேலச்சாவடி பஸ்நிறுத்தம் அருகே இன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அழைத்து பேசுவதாக சமரசம் செய்ததை அடுத்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் அச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடை, மடை பகுதிகளுக்கு கீழணையிலிருந்து நீர் திறந்துவிடப்படாவிடில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடையும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ஜி.மாதவன் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →